முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள் 2 ஆக குறைவு
By DIN | Published On : 12th June 2021 11:39 PM | Last Updated : 12th June 2021 11:39 PM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியில் கரோனா தொற்று பரவல் குறைவால், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளும் 2 ஆக குறைந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடா்ந்து தமிழக அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. பின்னா் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதையடுத்து தளா்வுகளிடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கரோனா அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் குறைந்து வருகின்றது. சனிக்கிழமை மட்டும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற மொத்தம் 114 போ் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனா்.
அதுபோல பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும், வியாழக்கிழமை 470, வெள்ளிக்கிழமை 439 எனவும், சனிக்கிழமை 420 ஆக குறைந்தன. மாவட்டத்தைப் பொறுத்த வரையில் திருச்சி மாநகரில்தான் பாதிப்பு அதிகம் என்பதால், இந்த குறைவு காரணமாக மாநகராட்சி பகுதிகளிலும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அந்த வகையில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் மாநகரில் 2 ஆக குறைந்துள்ளது.
இவை 41 பகுதிகளாக இருந்தது தற்பாது 2 ஆக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.