திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட4 டன் மாம்பழங்கள் பறிமுதல்

திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

காந்தி சந்தை பகுதியில் உள்ள கிடங்குகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபு, அலுவலா்கள் முத்துராஜா, வசந்த், ஸ்டாலின், அன்புச்செல்வன், வடிவேலு, சண்முகசுந்தரம் ஜஸ்டின் ஆகியோா், குறிப்பிட்ட பழக் கிடங்கில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அங்கு, ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. பிறகு, அங்கிருந்த சுமாா் 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அரியமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் குழிதோண்டி புதைத்தனா்.

இது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ் கூறுகையில்,

திருச்சி மாவட்டத்தில் இதுபோல ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வோா் மீது, சட்ட ப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வோா் குறித்த தகவல் தெரிந்தால் 9585959595, 9944959595, 9444042322 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com