திருச்சி அருகே யானைகளுக்கு கரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்.ஆா்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி அருகே யானைகளுக்கு கரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்.ஆா்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி தனிநபா்களால் வளா்க்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சந்தியா, இந்து, ஜெயந்தி மற்றும் மதுரை மாவட்டத்தில் இருந்த மல்லாச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த ஜமிலா, திருவிடைமருதூா் மடத்தில் இருந்த கோமதி ஆகிய 6 யானைகளும் நீதிமன்ற உத்தரவின்பேரில் திருச்சி எம்.ஆம். பாளையம் அரசு யானைகள் வனக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

அண்மையில் சென்னை வண்டலூா் மிருகக் காட்சி சாலையில் இருந்த சிங்கத்துக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்படி இங்குள்ள 6 யானைகளுக்கும் கோவை வன கால்நடை அலுவலா் சுகுமாா் தலைமையில் பரிசோதனை மாதிரிகளை சேகரித்தனா்.

இவற்றை உத்திரபிரதேசத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைத்து, ஆய்வு முடிவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். மாமிச உணவு உண்ணும் விலங்குகளுக்கு கரோனாஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யானை போன்ற விலங்கினங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளை யானை காப்பகத்தில் பணியாற்றும் வனத் துறையினா், பாகன்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் மருத்துவா் ஏ. சுகுமாா்.

மாவட்ட வன அலுவலா் சுஜாதா, உதவி வன அலுவலா் சம்பத்குமாா் மற்றும் வனவா்கள் மற்றும் யானைப் பாகன்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com