கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் விநியோகம்: அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்

திருச்சி மாவட்டத்தில் கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிவாரண நிதி, மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் கே.என். நேரு.
நிவாரண நிதி, மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி மாவட்டத்தில் கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிவாரண நிதி, மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு தலா ரூ. 2000 வீதம் நிவாரணத் தொகை, 175 பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரங்கள், மாநகராட்சி தூய்மைப்பணியாளராகப் பணியாற்றியபோது உயிரிழந்த எஸ். ஹென்றிஜோசப் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் அவா் வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மே 15முதல் 98 சதம் பேருக்கு அதாவது, 7,93,472 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 158.69 கோடியில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள (2 சதம்) 19,521 குடும்ப அட்டைதாரா்களுக்கும் தொடா்ந்து வழங்கப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக 2 ஆம் தவணையாக திருச்சி மாவட்டத்தில் 1,224 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8,13,001 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2000 மற்றும் 14 மளிகைப் பொருள் தொகுப்பு ரூ. 162.60 கோடி மதிப்பில் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்ரமணியன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளா் அருளரசு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிற்றரசு, மாவட்ட வழங்கல் அலுவலா் அன்பழகன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் தமீமுன்னிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com