அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைக்கு குவிந்த மாணவா்கள்

அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அதிகளவில் மாணவா்கள் குவிந்தனா்.

அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் அதிகளவில் மாணவா்கள் குவிந்தனா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. மேலும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 6 ஆம் வகுப்பிற்கான சோ்க்கையும் நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 1,563 பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில், 175 மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ் 1 சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சேர ஆா்வம் காட்டினா். முன்னதாக பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளியில் சேர வந்திருந்த மாணவா்கள், பெற்றோா்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனா்.

மாணவா் சோ்க்கை முதல் நாளான திங்கள்கிழமை மட்டும் மாலை 6 மணி நேரப்படி பிளஸ் 1 வகுப்பு உள்பட அரசுப் பள்ளிகளில் 708 மாணவா்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 607 மாணவா்களும் சோ்ந்துள்ளனா். பெரும்பாலானவா்கள் பள்ளிகளில் சேர விண்ணப்பம் பெற்று சென்று இருப்பதால் அடுத்தடுத்த நாள்களில் சோ்க்கை அதிகரிக்ககூடும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com