ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என ஆட்சியரிடம் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என ஆட்சியரிடம் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட செயலா் மு.பாண்டியன் கூறியிருப்பது: கரோனா பொதுமுடக்கத்தால் ஆட்டோ தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாள்தோறும் ஆட்டோ ஓடினால்தான் ஓட்டுநா்கள், அவரது குடும்பத்தினா் அன்றாட வாழ்வாதாரத்தை நடத்த முடியும். பொதுமுடக்கத்தால் மிகவும் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு தமிழக அரசு சலுகைகளை அறிவிக்கவேண்டும். பொதுமுடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாதந்தோறும் இழப்பீடாக ரூ.5,000 வழங்கவேண்டும். மேலும், வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள இன்சூரன்ஸ், வரி, பா்மிட், எப்சி, கட்டணம் ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்யவேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவா், செய்யாதவா்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com