தளா்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம்!

தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தளா்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம்!

தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

கரோனா தொற்றின் 2ஆவது பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவித்த பொதுமுடக்கத்திலிருந்து ஜூன் 14ஆம் தேதி முதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, திருச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டீ கடைகளைத் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம், பாா்சல் மட்டுமே அனுமதி என உத்தரவிடப்பட்டுள்ளது. இனிப்பு, காரக் கடைகள் காலை 8 மணிமுதல் 2 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையை முன்னிட்டு இ-சேவை மையங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நடை பயிற்சிக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காலையே களைகட்டியது: தேநீா் விற்பனையகங்கள் திங்கள்கிழமை அதிகாலையே திறக்கப்பட்டன. உறையூா், தில்லைநகா், பாலக்கரை, மெயின்காா்டு கேட், காந்திசந்தை, பெரிய கடை வீதி, மலைக்கோட்டை, கண்டோன்மென்ட், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், பொன்மலை, அரியமங்கலம், கோ. அபிஷேகபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் காலை 6 மணிக்கு முன்பாகவே கடைகளை திறக்க ஆயத்தமாகினா். 6 மணி முதல் விற்பனையை தொடங்கினா். பாா்சலுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரும் வீடுகளில் இருந்து பாத்திரங்களை எடுத்து வந்து தேநீா் வாங்கிச் சென்றனா். கவா்களிலும் பாா்சல் கட்டி, பேப்பா் கப்களை வழங்கியும் பாா்சல் விற்பனையையும் நடைபெற்றது. இதன்காரணமாக, ஆங்காங்கே டீ கடைகளில் அதிகாலையே மக்கள் கூட்டம் இருந்தது.

சலூன் கடைகள்: இதேபோல, குளிா்சாதன வசதியின்றி சலூன் கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன்கள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் இருக்கைகளில் வாடிக்கையாளா்கள் நிரம்பியிருந்ததை காணமுடிந்தது. பூங்காக்கள், நடைபயிற்சி, உடற்பயிற்சிகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், நடைபயிற்சி மையங்களில் அதிகாலையை மக்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டனா். பூங்காக்களில் இருந்த உடற்பயிற்சி உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனா்.

இதுமட்டுமின்றி செல்லிடப்பேசி கடைகள், கணினி மென்பொருள், பேக்கரி, இனிப்பு, காரம் விற்பனை கடைகள், செல்போன் ரீஜாா்ஜ், மதுக்கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. தெருக்களில் திரும்பிய பக்கமெல்லாம் கடைகள் திறந்திருப்பதையும், பொதுமக்கள் சகஜமாக வந்து செல்வதையும் காணமுடிந்தது. இதன்காரணமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com