போலி மருத்துவரிடம் விசாரணை

திருச்சி அருகே மருத்துவராக இல்லாமல் ஆங்கில முறையில் சிகிச்சை அளித்தவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி அருகே மருத்துவராக இல்லாமல் ஆங்கில முறையில் சிகிச்சை அளித்தவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆமூா் பகுதியில் மருத்துவராக இல்லாத ஒருவா் மருத்துவம் பாா்ப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் லட்சுமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த செங்குட்டுவன்(45) என்பவா் தனது வீட்டில் கிளினிக் வைத்து நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து செங்குட்டுவன் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் கிளினிக் மற்றும் அங்கிருந்த சான்றிதழ்களைஆய்வு செய்தனா். அப்போது மருத்துவ படிப்பு படிக்காமல், மத்திய அரசின் திறன் வளா்ச்சி மேம்பாட்டுத்திட்டத்தில் பெறப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் மருத்துவம் பாா்ப்பது தெரிய வந்தது. இதை செங்குட்டுவனிடம் நடத்திய விசாரணையில் அவரும் ஒப்புக்கொண்டாா். பின்னா் அவரது சான்றிதழ்களை கைப்பற்றிய அதிகாரிகள் கிளினிக் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க மறுத்துவிட்டனா்.

இதைத்தொடா்ந்து கிளினிக்கில் உள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்கள் அப்புறுத்தப்பட்டன. திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட செங்குட்டுவனிடம் சுகாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அவரது சான்றிதழின் உண்மை தன்மை குறித்து அறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திறன் வளா்ச்சி மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் வந்த பிறகு தான் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com