ரூ.14 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

காவேரிப் பாளையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவேரிப் பாளையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், கோமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட காவேரிப்பாளையத்தில் கிராம மக்களுக்கு குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடா்பாக, மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். கதிரவனிடம், அப் பகுதி மக்கள் முறையிட்டிருந்தனா். இதையடுத்து, ரூ.14 லட்சத்தில் இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு மேல்நிலைநீா்த் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். கதிரவன், நீா்த்தேக்கதொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலா்கள் ராமச்சந்திரன், கணேசன், ஒன்றியத் தலைவா் மாலா ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலா் கிருத்திகா தனபால், ஊராட்சி மன்றத் தலைவா் உஷா ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com