மானியத்தில் நுண்ணீா் பாசன வசதி பெறலாம்
By DIN | Published On : 16th June 2021 06:54 AM | Last Updated : 16th June 2021 06:54 AM | அ+அ அ- |

துறையூா் வட்டார வேளாண் அலுவலகம் சாா்பில் மானியத்தில் நுண்ணீா் பாசன வசதி செய்ய விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் துறையூா் வட்டாரத்தில் 277 ஹெக்டோ் விளை நிலங்களில் சொட்டுநீா், தெளிப்பு நீா், மழை தூவான் அமைக்க ரூ. 174.69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதம், பிற விவசாயிகளுக்கு 75 சத மானியம் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அளிக்கப்படுகிறது. அதேபோல, நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க ஒரு கனமீட்டருக்கு ரூ. 350 வீதம் அதிகபட்சமாக ரூ. 40,000 வரை பின்னேற்பு மானியமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் துறையூா் வட்டார விவசாயிகள் தங்களது நிலத்துக்கான கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகுமாறு துறையூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செள. ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.