ஜமாபந்தியில் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 22nd June 2021 04:00 AM | Last Updated : 22nd June 2021 04:00 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்திக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.
இணையம் மூலம் பெறப்பட்ட 52 மனுக்களில் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த 15, முதியோா் உதவித் தொகை கோரிய 3 என 18 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தா.பேட்டை பகுதி பிள்ளாப்பாளையம், மகாதேவி, மோருப்பட்டி, கரிகாலி, வடமலைப்பட்டி, காருகுடி, ஊரக்கரை, ஜம்புமடை,
வாளசிராமணி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய்க் கணக்குகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து மாங்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் சித்த மருத்துவ முகாம் மற்றும் தொட்டியம், முசிறி அரசு மருத்துவமனைகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.
ஜமாபந்தியில் முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன், அலுவலக மேலாளா் (பொது) சிவசுப்ரமணியம்பிள்ளை உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.