முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடியதாக 7 போ் கைது
By DIN | Published On : 04th March 2021 02:07 AM | Last Updated : 04th March 2021 02:07 AM | அ+அ அ- |

லால்குடி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜன் உத்தரவின்பேரில் அவரது தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை சென்றனா்.
அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை மடக்கிப் பிடித்த போலீஸாா் , மணல் அள்ளப் பயன்படுத்திய 8 மாட்டு வண்டிகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் இளவரசனிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து போலீஸாா் மணல் திருட்டில் ஈடுபட்டதாக நொச்சியம் கீழத்தெரு வே. கோபிநாத் (35), ப. வேம்படியான் (60), மு. ரஞ்சித்குமாா் ( 28), ம. ரவி (40), ர. யோகேஷ்வரன் , கா. லட்சுமணன் (20) முசிறி அய்யம்பாளையம் ரஜினி (35) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தப்பியோடிய குணா என்பவரைத் தேடுகின்றனா்.