முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருவானைக்கா ஏகவீராம்பாள் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 04th March 2021 02:06 AM | Last Updated : 04th March 2021 02:06 AM | அ+அ அ- |

கோயில் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியா்.
ஸ்ரீரங்கம்: திருவானைக்கா கீழரத வீதியில் உள்ள விநாயகா், பாலமுருகன், சந்திரசேகரேசுவரவ சுவாமி, ஏக வீராம்பாள் கோயில்களின் குடமுழுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீசந்திரசேகர குரு உடையாா் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட இக்கோயில் ஸ்ரீகாஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் வழிபட்ட தலம் ஆகும்.
புதன்கிழமை காலை 11 மணிக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற குடமுழுக்கில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக கடந்த 1 ஆம் தேதி பிரசன்ன விநாயகா் பூஜை, 2 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தனபூஜை,கோபூஜை, கஜபூஜை நடைபெற்றது. இக்கோயிலில் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் மந்த்ர கோஷம் என்னும் நூலில் உள்ளபடி, தொன்மை மாறாமல் வேடுவப்பெண்ணாக ஸ்ரீ ஏக வீராம்பாள் அம்மனின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை வி. அரசு (எ) அய்யாசாமி குடும்பத்தினா் மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்தனா்.