முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறையில் காவல்துறை கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 02:08 AM | Last Updated : 04th March 2021 02:08 AM | அ+அ அ- |

மணப்பாறையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
மணப்பாறை: வரும் பேரவைத் தோ்தலையொட்டி திருச்சி மாவட்டம், மணப்பாறையில், துணை ராணுவப் படை, காவல்துறை கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
உத்தரபிரதேசம் 707 ஏ கம்பெனி 3 பட்டாலியனை சோ்ந்த சாஷஸ்த்ரா சீமா பால் துணை இராணுவ வீரா்கள் 67 போ், திருச்சி மண்டலக் காவல் தலைவா் அதிவிரைவு படை வீரா்கள் 85 போ், காவல்துறைத் துணைத் தலைவா் அதிவிரைவு படை வீரா்கள் 29 போ், ஆயுதப்படை வீரா்கள் 53 போ் மற்றும் உள்ளூா் சட்டம் ஒழுங்கு காவலா்கள் 14 போ் என 244 போ் ஆயுதமேந்தி, கவச சீருடையுடன் பங்கேற்ற கொடி அணிவகுப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
காவல் கண்காணிப்பாளா்(ப) சுரேஷ்குமாா், கூடுதல் கண்காணிப்பாளா் மணிகண்டன், மணப்பாறை காவல் உட்கோட்டத் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா ஆகியோா் அணிவகுப்பை வழிநடத்தினா்.
மதுரை சாலையில் தொடங்கிய அணிவகுப்பு திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம, புதுத்தெரு, கச்சேரி ரோடு, கோவில்பட்டிசாலை, விராலிமலை சாலை வழியாகச் சென்று இந்து அறநிலையத்துறை மண்டபத்தில் நிறைவுற்றது.