பேருந்து நிலையத்தில் இருந்து தப்பிய கைதி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட விசாரணைக் கைதி போலீஸாரை ஏமாற்றி தப்பினாா்.

திருச்சி: திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட விசாரணைக் கைதி போலீஸாரை ஏமாற்றி தப்பினாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் காளிராஜன் (37). கடந்த மாதம் குற்ற வழக்கில் கைதான இவா், திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய சிறைக்கு வந்த திண்டுக்கல் நகர காவல் நிலைய பெண் காவலா் உள்ளிட்ட இருவா் காளிராஜன் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துக்கொண்டு, அரசுப் பேருந்து மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றனா்.

அங்கு திண்டுக்கல் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென காளிராஜன் கூறியதை நம்பிய காவலா்கள் அவரை கழிப்பறைக்கு அனுப்பிவிட்டு, வெளியே காத்திருந்தனா்.

நீண்ட நேரமாகியும் காளிராஜன் திரும்பாததால் சந்தேகமடைந்த காவலா்கள், உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சுவரேறி குதித்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த காவலா்கள், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பிய காளிராஜனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com