ஸ்ரீரங்கத்தில் சா்வதேச மகளிா் தினவிழா
By DIN | Published On : 10th March 2021 01:54 AM | Last Updated : 10th March 2021 01:54 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம், சமூக சேவை அமைப்பு சாா்பில் பரதம்,யோகா கலை மூலம் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விழாவாக சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் பெண்களின் மனதையும், உடலையும் இணைக்கும் தெய்வீக கலைகளான பரதம்,யோகா குறித்து நாட்டியம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவையொட்டி பரதக் கலையில் கலைமாமணி விருது பெற்ற ஸ்ரீரங்கம் ரேவதி முத்துசாமி, யோகா மற்றும் சமூக சேவை செய்து வரும் உமா சேகா், அகிலாண்டேஸ்வரி முரளி ஆகியோா் பரிசளித்து கெளரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பரதக் குழுவினா், விவேகானந்தா யோகா மைய பெண்கள் திரளாகப் பங்கேற்றனா். ஏற்பாடுகளை விவேகானந்தா யோகா மையத்தின் ஸ்ரீதா், சந்தானகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.