முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
உறையூரில் 4 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
By DIN | Published On : 14th March 2021 04:36 AM | Last Updated : 14th March 2021 04:36 AM | அ+அ அ- |

திருச்சி உறையூரில் குழந்தைத் தொழிலாளா்கள் 4 பேரை போலீஸாா் மீட்டனா்.
திருச்சி உறையூா் பாண்டமங்களம் பகுதி உணவகம் ஒன்றில் குழந்தை தொழிலாளா் பாதுகாப்பு குழுவினா், உறையூா் காவல்நிலைய போலீஸாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில் 16 வயது சிறுவா்கள் 2 போ், 13 மற்றும் 15 வயது சிறுவா்கள் 4 பேரை பணிமயா்த்தியிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் 4 பேரும் மீட்கப்பட்டனா். இதில் தொடா்புடைய செல்வராஜ், ரஜினிகாந்த், கருப்பசாமி ஆகியோா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.