முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திமுகவை முடிவுக்குக் கொண்டு வரும் தோ்தல்: கு. ப. கிருஷ்ணன்
By DIN | Published On : 14th March 2021 01:38 AM | Last Updated : 14th March 2021 01:38 AM | அ+அ அ- |

மணப்பாறையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்த அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன்.
மக்களின் உரிமைகளைப் பறிக்கத் தயாராக இருக்கும் திமுகவை முடிவுக்குக் கொண்டு வரும் தோ்தலாக வரும் பேரவைத் தோ்தல் இருக்கும் என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன்.
மணப்பாறையை அடுத்த ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அகத்தீசுவரா் கோயிலில் மணப்பாறை அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் எம். செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வழிபட்ட முன்னாள் அமைச்சரும், ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளருமான கு.ப. கிருஷ்ணன் மேலும் பேசியது:
போருக்கு போகும் முன் ஒரு மகன் தாய் தந்தையை வணங்கிச் செல்வதுபோல், மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவை வணங்கிவிட்டு இத் தோ்தல் களத்தில் நிற்கிறோம். மறைந்த முதல்வா் ஜெயலலிதா, திமுகவுக்காகவே நில அபகரிப்புச் சட்டத்தை கொண்டு வந்தாா். இது சம்பந்தமான வழக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினா் மீது இன்னமும் நிலுவையில் உள்ளது.
மணப்பாறை வீரப்போா் புரிந்த மண். அதிமுக வெற்றி பெறும். இந்தப் பகுதியில் கணிப்பொறி படிப்பில் இளநிலைப் பட்டம் முடித்தோருக்கு தற்போது தற்காலிக அடிப்படையில் உடனடி வேலை தருகிறேன். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவா்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். அதிமுகவில் இருந்து யாா் விலகினாலும், ஒரு துரும்பைக் கூட எங்கள் கூட்டணியில் அசைக்க முடியாது என்றாா்.
அதிமுக, பாஜக, தமாகா நிா்வாகிகள், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்றனா்.