ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் விபத்தில் பலி
By DIN | Published On : 14th March 2021 04:37 AM | Last Updated : 14th March 2021 04:37 AM | அ+அ அ- |

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் சாலை விபத்தில் இறந்தாா்.
மணப்பாறை அருகே பூமாலைபட்டியைச் சோ்ந்தவா் ஆண்டி(75), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். சனிக்கிழமை பெரியாா் சிலை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஆண்டி தனியாா் சுற்றுலா பேருந்து மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநா் அரசுநிலைபாளையம் பொ. பாண்டியனை (52)கைது செய்து விசாரிக்கின்றனா்.