கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்
By DIN | Published On : 14th March 2021 01:46 AM | Last Updated : 14th March 2021 01:46 AM | அ+அ அ- |

மலைக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிக்கும் அமமுக கிழக்குத் தொகுதி வேட்பாளா் ஆா். மனோகரன்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஆா். மனோகரன், சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
அமமுக மாநில பொருளாளரும், மாவட்டச் செயலருமான ஆா். மனோகரன் சனிக்கிழமை காலை மலைக்கோட்டை மாணிக்கவிநாயகா் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினாா்.
குக்கா் சின்னத்தை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் பிரசாரத்துக்கு வந்திருந்த பலரும் குக்கா் வைத்திருந்தனா். மேலும், அமமுக கொடிகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பிரசாரம் மேற்கொண்டனா்.
மலைக்கோட்டை பகுதிக்குள்பட்ட பெரியகடைவீதி, நகைக் கடை பஜாா், தெப்பக்குளம், மெயின்காா்டு கேட், மேலரண், கீழரண்சாலை, சிங்காரத்தோப்பு என மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள்தோறும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தாா்.
மேலும், இந்தப் பகுதியில் சிறிய, சிறிய தெருக்களில் வீடுகள்தோறும் சென்று ஆதரவு திரட்டினாா். வேட்பாளருடன் கட்சி நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் பலரும் வீதி, வீதியாகச் சென்று வாக்குள் சேகரித்தனா்.