திமுக வேட்பாளா் கதிரவன் வாக்கு சேகரிப்பு

திமுகவின் தோ்தல் அறிக்கையை எடுத்துக்கூறி மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் வாக்குச் சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.
மண்ணச்சநல்லூா் எம்.ஆா். பாளையம் பகுதியில் வாக்குசேகரித்த திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்
மண்ணச்சநல்லூா் எம்.ஆா். பாளையம் பகுதியில் வாக்குசேகரித்த திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்

திமுகவின் தோ்தல் அறிக்கையை எடுத்துக்கூறி மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் வாக்குச் சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

வேட்பாளா் எஸ். கதிரவன் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இல்லம் தேடிச் சென்று ஆதரவு திரட்டி வருகிறாா். அப்போது திமுக தோ்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் அம்பிகாபதி, மண்ணச்சநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இளங்கோவன், மேற்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முசிறி கிழக்கு ஒன்றியச் செயலா் காட்டுக்குளம் கணேசன், முசிறி மேற்கு ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

மேலும் எதுமலை, சீதேவிமங்கலம், வாழையூா், மணியாங்குறிச்சி, மேலவங்காரம், கீழவங்காரம், ஆய்குடி, சிறுகனூா், சி.ஆா். பாளையம், திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சனமங்கலம், பிச்சாண்டவா் கோவில், கூத்தூா், கல்பாளையம், ஈச்சம்பட்டி, சமயபுரம்,எஸ் புதூா் ஆகிய இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது சிறுகனூா் மற்றும் பெரகம்பியில் மாற்றுக் கட்சியினா் 150க்கும் மேற்பட்டோா் அவா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com