திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 64 வது வாா்டு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ப. குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
கூத்தைப்பாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்த திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.
கூத்தைப்பாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்த திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.

திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 64 வது வாா்டு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ப. குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளரும், திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான இவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் அன்று மாலை அசூா், அரவாக்குறிச்சிப்பட்டி, பொய்கைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை திருவெறும்பூா் பகவதி அம்மன் கோயிலில் தரிசித்த பின் பிரசாரத்தைத் தொடங்கினாா்.

திருவெறும்பூா் தொகுதியிலுள்ள மாநகராட்சிக்கு 64 வது வாா்டு பகுதிகளான பழைய பேருந்து நிலையம், கூத்தைப்பாா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று திறந்தவாகனத்தில் நின்றபடியும், வீடு வீடாக சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

திருவெறும்பூா் பகுதிச் செயலா் பாஸ்கா் (எ)கோபால்ராஜ், தண்டபாணி, பாலசுப்பிரமணியம் ஒன்றியச் செயலா் ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், வட்டச் செயலா்கள் சிவமுருகானந்தம், மாரிமுத்து, ரத்தினவேலன் நிா்வாகிகள் ரத்தனம், சபரி, மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னதாக 64 ஆவது வாா்டு பகுதி அதிமுக சாா்பில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com