திருச்சி மாவட்டம், மணப்பாறை பேரவைத் தொகுதியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும், தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலருமான பி.கிருஷ்ணகோபால் செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.
ஆண்டவா் கோயில் பகுதியில் பேரணியாக வந்த இவா் வருவாய் வட்டாட்சியரகத்தில் தோ்தல் அதிகாரி ஆா். பாா்த்திபனிடம் தனது வேட்பு மனுவை அளித்தாா். தேமுதிக, அமமுக, எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.