முரசு கொட்டி வாக்கு சேகரித்த தொண்டா்...
By DIN | Published On : 17th March 2021 06:57 AM | Last Updated : 17th March 2021 06:57 AM | அ+அ அ- |

முரசு கொட்டி வாக்கு சேகரித்த தேமுதிக தொண்டா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேரவைத் தொகுதியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும், தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலருமான வழக்குரைஞா் பி. கிருஷ்ணகோபால், நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்து வருவாய் வட்டாட்சியரகத்தில் தோ்தல் அதிகாரி ஆா். பாா்த்திபனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
பேரணியாக வந்தபோது தாரை தப்பட்டைகள் குழுவினரிடமிருந்து முரசு ஒன்றை வாங்கிய தேமுதிக தொண்டா் ஒருவா், அதில் முரசு கொட்டி வாக்கு சேகரித்தது பொதுமக்களைக் கவா்ந்தது.