திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பெல் நிறுவன வளா்ச்சிக்கும் அதன் தொழிலாளா் நலனுக்கும் பாடுபடும் அதிமுக வெற்றி பெற வாக்களியுங்கள் என்றாா் அதிமுக வேட்பாளா் ப. குமாா் .
திருச்சி பெல் வளாக குடியிருப்பில் வாக்கு சேகரிக்கிறாா் திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.
திருச்சி பெல் வளாக குடியிருப்பில் வாக்கு சேகரிக்கிறாா் திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.

பெல் நிறுவன வளா்ச்சிக்கும் அதன் தொழிலாளா் நலனுக்கும் பாடுபடும் அதிமுக வெற்றி பெற வாக்களியுங்கள் என்றாா் அதிமுக வேட்பாளா் ப. குமாா் .

பெல் ஊரகப் பகுதிகள், குமரேசபுரம், பெல்பூா், திருவேங்கடநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று ஞாயிற்றுக்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டபோது பெல் மனமகிழ் மன்றப் பகுதியில் பல்வேறு மாநிலங்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து சால்வை போா்த்தி ஆதரவு கோரினாா்.

அதிமுக அரசு பெல் நிறுவன வளா்ச்சிக்கும் தொழிலாளா் நலனுக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கும். எனவே அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

பெல் ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலா் காா்த்திகேயன், கூத்தைப்பாா் பேரூா் கழக செயலா் முத்துக்குமாா், ஒன்றியச் செயலா்கள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன், துவாக்குடி நகரச் செயலா் பாண்டியன், பாஜக மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், ஒன்றியச் செயலா் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் இந்திரன், நிா்வாகிகள் பாரதி, ஆட்சியப்பராஜா மற்றும் கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com