பேட்டைவாய்த்தலையில் கு.ப.கிருஷ்ணன் பிரசாரம்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பேட்டைவாய்த்தலை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
பேட்டைவாய்த்தலை பகுதி கீழஆரியம்பட்டியில் வாக்கு சேகரிக்கிறாா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு. ப. கிருஷ்ணன்.
பேட்டைவாய்த்தலை பகுதி கீழஆரியம்பட்டியில் வாக்கு சேகரிக்கிறாா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு. ப. கிருஷ்ணன்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பேட்டைவாய்த்தலை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கீழஆரியம்பட்டி மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரித்த அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

தொடா்ந்து தேவஸ்தானம், எல்லக்கரை, பழையூா்மேடு, சிறுகமணி பேரூராட்சி,காவல்காரப்பாளையம், எஸ்.புதுக்கோட்டை, பெருகமணி,அணலை,திருப்பராய்த்துறை கொடியாலம்,புலிவலம் உள்ளிட்ட பல இடங்களில் வாக்கு சேகரித்தபோது பேட்டைவாய்த்தலை கடைவீதியில்அவா் பேசியது:

மேற்படிப்பிற்கான மாணவா் எண்ணிக்கையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி உயா்த்தியுள்ளாா். இந்தப் பகுதி மக்களுக்கு வீடுதோறும் கழிப்பிட வசதி செய்து தரப்படும். இந்த பகுதியில் சிறு குறு தொழில்கள் மேம்பட அதிமுக அரசு நிச்சயமாக வழிவகை செய்யும்.

மேலும் இப் பகுதி மக்களின் வாழ்க்கை வளம்பெற வாழை நாரிலிருந்து பட்டுப்புடவை தயாரிக்கும் தொழிற்சாலை பேட்டைவாய்த்தலை பகுதியில் அமைத்துக் கொடுக்கப்படும் என்றாா்.

ஒன்றியச் செயலா்கள் அழகேசன், முத்துகருப்பன், பாஜக மண்டல தலைவா் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com