அதிமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள்
By DIN | Published On : 26th March 2021 07:50 AM | Last Updated : 26th March 2021 07:50 AM | அ+அ அ- |

பழையபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா்.சந்திரசேகருக்கு கும்ப ஆரத்தி எடுத்த பெண்கள்.
அதிமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.சந்திரசேகா்.
மருங்காபுரி தெற்கு ஒன்றியத்திலுள்ள 60 இடங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:
பெண்களில் நலனில் அக்கறை கொண்ட மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, பெண் சிசு பாதுகாப்பு, தாலிக்குத் தங்கம், திருமண உதவி, மகப்பேறு உதவி, மிக்சி, கிரைண்டா், மின்விசிறி என எண்ணற்ற திட்டங்களை வழங்கினாா்.
தற்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள், வாஷிங்மெஷின், கேபிள் சேவை, சூரியசக்தி சமையல் அடுப்பு, ரூ.1500 உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும் என பெண்களுக்கான திட்டங்களை வாக்குறுதியாக அளித்துள்ளாா். எனவே மீண்டும் அதிமுக அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் அதிமுக திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலா் டி.எம்.முருகன், பாஜக மருங்காபுரி ஒன்றியத் தலைவா் பொன்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.