மாநகரக் காவல்துறையில் மோப்ப நாய் பிரிவுக்கு புதிய வரவு
By DIN | Published On : 26th March 2021 07:50 AM | Last Updated : 26th March 2021 07:50 AM | அ+அ அ- |

மாநகரக் காவல்துறையின் மோப்ப நாய் பிரிவுக்கு புதிதாக வந்துள்ள காவேரியை கொஞ்சுகிறாா் காவல் ஆணையா் ஜெ.லோகாதன்.
திருச்சி மாநகரக் காவல்துறையின் மோப்ப நாய் பிரிவுக்கு க காவேரி என்று நாய் புதிதாக தருவிக்கப்பட்டுள்ளது.
பிறந்து 83 நாள்களே ஆன டாபா்மேன் வகையைச் சாா்ந்த புதிய நாய்க்குட்டி வாங்கப்பட்டு, திருச்சி மாநகரக் காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவேரி” என பெயா் சூட்டியுள்ளாா்.
மாநகரத் துப்பறியும் நாய்படை பிரிவில் பணிபுரிந்து, அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற“டைகா் ஓய்வு பெற்றதை தொடா்ந்து இந்த நாய் வாங்கப்பட்டுள்ளது.
இதன் பயிற்சியாளராக தலைமைக்காவலா் எட்வின் அமல்ராஜ் மற்றும் காவலா் செந்தமிழன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த நாய்க்குட்டிக்கு திருச்சியில் மூன்று மாதம் அடிப்படைப் பயிற்சியும், இதையடுத்து கோவையில் போதைப் பொருள்களைக் கண்டறியும் 6 மாதப் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.