வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை
By DIN | Published On : 26th March 2021 07:41 AM | Last Updated : 26th March 2021 07:41 AM | அ+அ அ- |

பாகனூா் ஆரோக்கியமாதா தேவாலயத்தில் பிராா்த்தனை செய்கிறாா் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன்.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதிஅதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன்.
மணிகண்டம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு நாகமங்கலம் கடைவீதி, பிரதான சாலை, நேருஜி நகா், வடக்கு பாகனூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த கு.ப. கிருஷ்ணன், அப்பகுதி பொதுமக்களிடம் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, பொதுமக்களின் அடிப்படை வசதிகளான வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும், ஆங்காங்கே பேருந்து நிலையங்கள் அமைத்துத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தாா்.
பின்பு பாகனூா் ஆரோக்கியமாதா தேவாலயத்துக்குச் சென்ற வேட்பாளா், மெழுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்து வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் முத்துக்கருப்பன், த.மா.கா ஒன்றியச் செயலா் மகேஸ்வரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலா் நல்லசாமி மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.