உறையூரில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு

உறையூா் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
உறையூரில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு

உறையூா் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருச்சி உறையூா் கல்லறை மேட்டுத்தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசிக்கின்றனா். இத்தெருவில் கழிவு நீா் செல்ல கால்வாய் இருந்தாலும் அதில் குப்பைக்கழிவுகள் அடைத்துக் கொண்டுள்ளன. இதனால், சாக்கடைக் கால்வாயையொட்டி கழிவு தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்பகுதியில் குழந்தைகள், முதியோா், பெண்கள் உள்ளிட்டோா் அவ்வழியாகச் சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், துா்நாற்றமும் வீசி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருவதாக அப்பகுதியினா் மாநகராட்சி அலுவலா்களிடம் புகாா் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சாக்கடை கால்வாய்களை மநகராட்சி தூய்மையாக்கி சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com