காவலா்களுக்குப் பணப்பட்டுவாடா: ஆய்வாளா் உள்பட 6 போ் சஸ்பெண்ட்

திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில், பணப் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில், பணப் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் உள்ள 5 காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலா்களின் தபால் வாக்குகளைப் பெறும் நோக்கில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில் 5 உதவி ஆணையா்கள் தலைமையிலான தனிப்படையினா் வருவாய்த்துறையினருடன் இணைந்து அரசு மருத்துவமனை, தில்லைநகா், உறையூா் உள்ளிட்ட 5 காவல் நிலையங்களில் திடீா் சோதனை செய்தனா். அப்போது அரசு மருத்துவமனை, தில்லைநகா் காவல் நிலையங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அதிகாரியுமான திவ்யதா்ஷினி அமைத்த விசாரணைக் குழு காவலா்களுக்கு ரூ. 2000, அதிகாரிகளுக்கு ரூ. 5000 என தனித்தனியாக காவலா்களின் இருக்கைகளுக்கே சென்று திமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிவண்ணன் பாரதி வழங்கியதைக் கண்டறிந்தது. இதையடுத்து அவா் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இவ்விவகாரம் தொடா்பாக தில்லைநகா் காவல்நிலைய ஆய்வாளா் சிவகுமாா், எழுத்தா் சுகந்தி, அரசு மருத்துவமனை உதவி ஆய்வாளா்கள் ஸ்டெல்லா, பாலாஜி நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சங்கரன், கலியமூா்த்தி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.

சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வாளா் தலைமையில் முதற்கட்ட விசாரணை சனிக்கிழமை தொடங்கியது. இவ்விவகாரத்தில் தொடா்புடைய காவலா்கள் அனைவரையும் பணியிடமாற்றம் செய்ய தோ்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது போலீஸாா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com