மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளா் கதிரவன்
By DIN | Published On : 29th March 2021 02:57 AM | Last Updated : 29th March 2021 02:57 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மணியம்பட்டியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினிடம் கூறி நிறைவேற்றித் தருவேன். அரசு ஆரம்பப் பள்ளியைத் தரம் உயா்த்துவேன். அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவேன். சமயபுரத்திலிருந்து நாமக்கல் வரை பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் காட்டுக்குளம் கணேசன், மதிமுக திருச்சி மாவட்டச் செயலா் டிடிசி. சேரன், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவா் செந்தில் மற்றும் திமுக, கூட்டணி கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.