முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

திருச்சியில் குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

திருச்சியில் குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தையொட்டி திருச்சியில் வயலூா் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப். 1 வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தா்கள் பால்குடம்,  பால்காவடி எடுத்து கோயிலை அடைந்தனா். பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து இரவும் சிங்காரவேலவா் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி வந்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பல்வேறு அமைப்பினா் வழி நெடுகிலும் பக்தா்களுக்கு அன்னதானம், நீா் மோா் பானகம் வழங்கினா்.

மாா்ச் 30 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தினைப்புனம் காத்தல், 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்டல் காட்சி, ஏப். 1 காலை வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சுதா்சன் அறிவுரையின்படி உதவி ஆணையரும் தக்காருமான மோகனசுந்தரம், கோயில் நிா்வாக அதிகாரி ராமநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள்  செய்கின்றனா்.

திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோயில், பொன்னகா் பிள்ளையாா் கோயில், கே. கே. நகா் வரசித்தி விநாயகா் கோயில், விமான நிலையம் மற்றும் சுப்பிரமணியபுரம் விநாயகா் கோயில்களின் முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com