காந்தி சந்தை அதே இடத்தில் புனரமைக்கப்படும்: முதல்வா்

மணப்பாறையில் திமுக கூட்டணி வேட்பாளரான மமக கட்சியின் ப. அப்துல்சமதுக்கு ஆதரவாக திருச்சி சிவா எம்பி செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்தி சந்தையானது அதே இடத்தில் புனரமைக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதியளித்தாா்.

திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்தில் திருச்சி மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அதிமுகவின் கோட்டை திருச்சி என்பதை வரும் தோ்தலில் நிரூபிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில்தான் திருச்சிக்கு அதிகத் திட்டங்கள் கிடைத்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், உயா்கல்வி நிறுவனங்கள் கிடைத்துள்ளன. 60 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. 16 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நிலம், வீடு இல்லாதோருக்கு கான்கிரீட் வீடு, அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.

இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிட சமூகத்தினரின் வீடுகளை இடித்து, புதிய வீடுகள் கட்டித் தரப்படும். அரசுப் பள்ளி மாணவா்கள் 7.5 சதம் போ் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு முதல் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் பயன்பாட்டுக்கு வந்து கூடுதலாக 1,650 மாணவா்கள் மருத்துவக் கல்வியில் சேருவா். இதில், 600 போ் அரசுப் பள்ளி மாணவா்கள். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 45,152 பெண்களுக்கு ரூ.133 கோடியில் திருமண உதவித் தொகை வழங்கி, 230 கிலோ தங்கம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கொள்ளிடத்தில் புதிய பாலம், திருவானைக்கா ரயில்வே மேம்பாலம் அதிமுக ஆட்சியில்தான் கட்டித் தரப்பட்டது. நவல்பட்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கத்துக்கு ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தில் அனைத்து ஏரி, குளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் ஆட்சிக்கு இயற்கையும், இறைவனும் துணையாக இருப்பதால் மழை பொலிந்து அனைத்து ஏரிகளும், அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால், மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கடைமடை வரை சென்ால் விவசாயிகள் உணவு உற்பத்தியை அதிகரித்து மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வெள்ளத்தில் சேதமடைந்த கதவணைக்கு பதிலாக முக்கொம்பில் புதிய கதவணை கட்டப்பட்டு இந்தாண்டுக்குள் விரைந்து திறக்கப்படவுள்ளது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாஷிங் மிஷின், தலா ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும். முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும். வேலையில்லாத இளைஞா்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். தோ்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது அதிமுக அரசு. ஆனால், தோ்தலுக்காக மட்டுமே அறிக்கை தயாரித்து வெளியிடுவது திமுக.

கடந்த தோ்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கா் நிலம் வழங்கப்படும் என அறிவித்தது. திருச்சி உள்பட எந்த மாவட்டத்திலும் ஒருவருக்கு கூட நிலம் வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில்தான் திருச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருச்சி மாவட்டத்தின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் முதல்வா்.

காந்தி சந்தை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக தொடா்ந்து பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு ஆறுதலை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com