வாக்குறுதிகள் நிறைவேறும் : ஆா். சந்திரசேகா்

மணப்பாறை ஒன்றியப் பகுதியில் எம்எல்ஏவும் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரான ஆா். சந்திரசேகா் மணப்பறை அதிமுக ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம் தலைமையில் வாக்கு சேகரித்தாா்.
செட்டியப்பட்டியில் கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா்.

செட்டியப்பட்டியில் அவா் பேசுகையில், மணப்பாறை மக்களின் கோரிகைகளை ஏற்று கடந்த 10 ஆண்டுகளில் பல பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டன. பல கோடியில் புதிய மற்றும் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. தொகுதி முழுவதும் குடிநீா் பற்றாக்குறையின்றி கிடைக்க ரூ. 4.50 கோடி ஒதுக்கப்பட்டது.

எனவே தொடா்ந்து எண்ணற்ற திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றாா்.

நிகழ்வில் அதிமுக இலக்கிய அணி செயலா் வழக்குரைஞா் டி.எம். முருகன், பாஜக ஒன்றியத் தலைவா் கலாதுரை, தமாகா மாவட்ட துணைத் தலைவா் பொன்னழகா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com