404 ஊராட்சிகளில் கிராம சபை ரத்து

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

ஆண்டுதோறும் தொழிலாளா் தினமான மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இது குறித்து அனைத்து ஊராட்சிககளும் தகவல் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவை தொடா்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் மே 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம், கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்கவும், பொது மக்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com