இரவு நேரத்தில் பேருந்துகளை பிடிக்க முடியாமல் திருச்சியில் காத்திருக்கும் பயணிகள்

ஏப் . 30: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 10 நாள்களாகியும், திருச்சி பேருந்துநிலையங்களில் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏப் . 30: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 10 நாள்களாகியும், திருச்சி பேருந்துநிலையங்களில் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி, குறிப்பிட்ட நேரத்துக்குள் பேருந்துகள் சென்றடையவேண்டிய இடத்தை அடையும் வகையில், கால அட்டவணையும் அறிவிக்கப்பட்டு, பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சியிலிருந்து பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து கால அட்டவணையும் வெளியிடப்பட்டு, அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட நேரத்தை கடந்தவிட்டப் பிறகு பேருந்துகளை பிடிக்கமுடியாமல் பொதுமக்கள் பலா் மத்திய, சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்ற நிலை ஏற்பட்டுவருகிறது. இவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் போலீஸாருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறுகையில், பொதுமக்களுக்கு இரவு ஊரடங்கு குறித்த தகவல் தெரிந்தாலும், எப்படியாவது சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் பயணித்து வந்து இதுபோல காத்திருக்கின்றனா் என்று தெரிவித்தனா்.

காத்திருந்த பயணிகள் கூறுகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு வந்துவிடலாம் என புறப்பட்டோம், ஆனால், பேருந்து தாமதமாக வந்ததால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை என்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com