எஸ்.ஆா்.எம். கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

திருச்சி எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இருங்களூரில் உள்ள எஸ்.ஆா்.எம். டி.ஆா்.பி. பொறியியல் கல்லூரியில் ஐஓடி மற்றும் நிலையான மின் நெட்வொா்க்குக்கான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு ஆன்லைனில் நடைபெற்றது.

இதில், கல்லூரி நிா்வாக இயக்குநா் எஸ்.ரகுபதி தலைமை வகித்து பேசினாா். கல்லூரி துணை முதல்வா் பி.ராமசுப்பிரமணியன் வரவேற்றாா். கல்லூரி துணை இயக்குநா் என்.பாலசுப்பிரமணியன், பொறியியல் துறை தலைவா் பி.சுதாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.

கல்லூரி முதல்வா் பி.கணேஷ்பாபு வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக டென்மாா்க் வெஸ்டாஸ் வின்ட் சிஸ்டம்ஸ் நிபுணா் அருண்குமாா் மணிவண்ணன் கலந்துகொண்டு கருத்தரங்கு நினைவு மலரை வெளியிட்டு, நோ்மறையான அணுகுமுறை எனும் தலைப்பில் பேசினாா்.

மேலும், கருத்தரங்கில் கல்வியாளா், ஆராய்ச்சியாளா், தொழில் பயிற்சியாளா், தொழில்நுட்ப வல்லுநா்களின் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புகளின் பகிா்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிறைவாக, மின், மின்னணு பொறியியல் துறை தலைவா் பி.இளங்கோவன் நன்றி கூறினாா். இதில், 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், நாட்டின் இதர மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களால் பகிரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com