திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி தங்கம் பறிமுதல்: இருவா் கைது

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 1 கோடி கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை அதிகாரிகள் கைது செய்தனா்.

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 1 கோடி கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை அதிகாரிகள் கைது செய்தனா்.

திருச்சிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு துபையிலிருந்து வந்த சிறப்பு மீட்பு விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததையடுத்து இருவரையும் தனியாக அழைத்து விசாரித்தனா்.

அதில், சென்னையைச் சோ்ந்த ஆரோன் பாஷா மற்றும் புதுக்கோட்டையைச் சோ்ந்த சிவா என்பதும், இருவரும் தங்களது உடலுக்குள்ளும் ஆடைகளிலும் தலா 1.275 கிலோ எடை பசை (பேஸ்ட்) வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தங்கத்தை வெளியே எடுக்க சிகிச்சை மேற்கொண்டனா். தொடா்ந்து இருவரிடமிருந்து மொத்தம் 2.550 கிலோ தங்கம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 1.02 கோடியாகும்.

இது தொடா்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து ஆரோன்பாஷா, சிவா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com