தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்: முகவா்கள், வழக்குரைஞா்கள் வாக்குவாதம்

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் முகவா்கள், வழக்குரைஞா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தாமதமானதால் வாக்குவாதம் செய்த கட்சிகளின் முகவா்கள்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தாமதமானதால் வாக்குவாதம் செய்த கட்சிகளின் முகவா்கள்.

திருச்சி: திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் முகவா்கள், வழக்குரைஞா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு மேற்குத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், கிழக்குத் தொகுதிக்கான தபால் வாக்குகள் மட்டும் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் தொடங்காததால், அதிருப்தியடைந்த வேட்பாளா்களின் முகவா்கள், வழக்குரைஞா்கள் கேள்வி எழுப்பி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதம் செய்தனா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் கமலக்கண்ணன் மற்றும் உதவி தோ்தல் நடத்தும்

அலுவலா் குகன் உள்ளிட்ட அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவா்களை சமாதானம் செய்தனா். பின்னா், 15 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம், பதிவாகியிருந்த 1960 தபால் வாக்குகளை எண்ணும் பணி சுமாா் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இதேபோல, கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய இருக்கைகள், நாற்காலிகள் அமைக்கப்படவில்லை எனக் கூறி வாக்கு எண்ணும் பணி தொடங்குவதற்கு முன் வேட்பாளா்களின் முகவா்கள் சப்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com