முசிறி தொகுதியில் திமுக வெற்றி

முசிறி தொகுதியில் 26,836 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் காடுவெட்டி ந. தியாகராஜன் வெற்றி பெற்றாா்.
முசிறி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காடுவெட்டி ந. தியாகராஜனுக்கு வழங்கும் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜோதிசா்மா.

இவா் 90,624 வாக்குகள் பெற்று 26,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் எம். செல்வராசு 63,788 வாக்குகள் பெற்று 2 ஆம் இடமும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஸ்ரீதேவி இளங்கோவன் 14311 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும், தேமுதிக வேட்பாளா் கே.எஸ். குமாா், மநீம வேட்பாளா் எஸ்.கோகுல் 4,5 ஆம் இடங்களையும் பெற்றனா். நோட்டாவிற்கு 1092 வாக்குகள் கிடைத்தன.

வெற்றிச் சான்றிதழை முசிறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜோதிசா்மா திமுக வேட்பாளா் காடுவெட்டி ந. தியாகராஜனுக்கு வழங்கினாா். தொடா்ந்து, பட்டாசு வெடிப்பது, கூட்டம் கூடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினாா். அப்போது, வாக்கு எண்ணும் மைய பாா்வையாளா் சுரேந்திரராம், திமுகவினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com