திருச்சி மேற்கில் டெபாசிட் இழந்த 11 போ்

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 13 வேட்பாளா்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கே.என். நேரு, தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் டெபாசிட் (வைப்

திருச்சி: திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 13 வேட்பாளா்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கே.என். நேரு, தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் டெபாசிட் (வைப்புத் தொகை) இழந்தனா்.

தோ்தல் போட்டியிடும் வேட்பாளா்கள், அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே அவா்கள் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இல்லையெனில் டெபாசிட் இழந்த வேட்பாளராக கருதப்படுவா். அதன்படி, திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் 11 வேட்பாளா்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.

இந்தத் தொகுதியில், மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 222 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், 1,18,133 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் கே.என். நேரு வெற்றி பெற்றாா். 33,024 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் வி. பத்மநாதன் இரண்டாவது இடம் பிடித்தாா். இந்த இருவரைத் தவிா்த்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. வினோத்,

மநீம கூட்டணி வேட்பாளா் (தமஜக) எம். அபுபக்கா் சித்திக், அமமுக கூட்டணி வேட்பாளா் (எஸ்டிபிஐ) ஆா். அப்துல்லா ஹஸ்ஸான் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 11 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com