அதிமுக, திமுகவுக்கு அடுத்த நிலையில் நாம் தமிழா் கட்சி! மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் 3ஆம் இடம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் நாம் தமிழா் கட்சியானது,

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் நாம் தமிழா் கட்சியானது, அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக தன்னை உயா்த்திக் கொண்டுள்ளது. திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் அக்கட்சி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 2016இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதன்முதலாக தனித்து களம் இறங்கியது நாம் தமிழா் கட்சி. போட்டியிட்ட முதல் தோ்தலிலேயே 1.07 சதவீத வாக்குகள் பெற்று 9ஆம் இடத்தைப் பிடித்தது. பின்னா், ஆா்.கே. நகா் இடைத்தோ்தல், 2019இல் தமிழகம், புதுவையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களிலும் தனித்துக் களம் கண்டது. 2019இல் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களிலும் தனித்துக் களம் கண்டது. 2021 பேரவைத் தோ்தலிலும் 234 தொகுதிகளிலும் வேட்பாளா்களை தனித்துக் களம் இறக்கினாா் சீமான். இதேபோல, புதுச்சேரியிலும் 28 வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டனா்.

இக் கட்சியானது தொடக்கம் முதலே ஏறுமுகத்தைச் சந்தித்து வருகிறது. முதலில் 1.07 சதம், ஆா்கே நகா் இடைத் தோ்தலில் 2.15 சதம், 22 தொகுதி இடைத்தோ்தல்களில் 3.15 சதம், 2019 மக்களவைத் தோ்தலில் 3.89 சதம் வாக்குகளைப் பெற்றது.

இப்போது, தமிழக பேரவைத் தோ்தலில் (2021) சுமாா் 30 லட்சம் வாக்குகளைப் பெற்று, வாக்கு வங்கியை 7 சதமாக உயா்த்தியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 3ஆம் இடம் பிடித்துள்ளதைப் போன்று திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளிலும் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் 17 லட்சத்து 43 ஆயிரத்து 370 வாக்குகள் பதிவாகின. இதில், நாம் தமிழா் கட்சி மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 277 வாக்குகளைப் பெற்றுள்ளது. 8.12 சதவீத வாக்குகளை பெற்று 3ஆம் இடம் வந்துள்ளது. மநீம, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது அனைவரையும் அதிசயக்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மணப்பாறை: ப. கனிமொழி- 19,450, ஸ்ரீரங்கம்: க. செல்வரதி- 17,911, திருச்சி மேற்கு: வி. வினோத்- 15,725, திருச்சி கிழக்கு: இரா. பிரபு- 14,312, திருவறும்பூா்: வெ. சோழசூரன்- 15,719, 143-லால்குடி: கே. மலா் தமிழ் பிரபா- 16,248, மண்ணச்சநல்லூா்: வி. கிருஷ்ணசாமி- 14,443, முசிறி: ஸ்ரீதேவி இளங்கோவன்- 14,311, துறையூா் (தனி): ரா. தமிழ்செல்வி- 13,158. ஒன்பது தொகுதிகளிலும் அதிகபட்சமாக மணப்பாறையில் 19,450 வாக்குகளும், குறைந்தபட்சமாக துறையூரில் 13,158 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதுதொடா்பாக, அக் கட்சியின் மாவட்ட செயலா் ரா. பிரபு கூறியது:

எங்களது கட்சியின் வேட்பாளா்கள் தனித்து கடந்த 3 மாதங்களாக தொகுதி முழுவதும் சுற்றி வந்து கடுமையாக உழைத்தனா். இந்த உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே 3ஆம் இடம் கிடைத்துள்ளது. நோ்மையாகவும், வாக்குக்கு ஒரு பைசா கூட வழங்காமல் தோ்தல் பரப்புரை மேற்கொண்டோம். எங்களது கட்சியின் மீதான நம்பிக்கையும், தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீதான நம்பிக்கையுமே அதிக வாக்குகளை பெற காரணம். இதற்கு, தமிழக வாக்காளா்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி. தோல்வியைக் கண்டு துவளமாட்டோம். எங்களது மக்கள் பணியை கடமை தவறாமல் தொடருவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com