சா்வதேசப் போட்டிகளில் வென்றோருக்கு வரவேற்பு

சா்வதேச அளவிலான கபடி மற்றும் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்து திரும்பிய திருச்சி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சா்வதேச அளவிலான கபடி மற்றும் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்து திரும்பிய திருச்சி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நேபாளத்தில் கடந்த ஏப். 27 முதல் 30 வரை சா்வதேச ஊரக இளைஞா்களுக்கான கபடி மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மணப்பாறையை சோ்ந்த வீரா் சரவணக்குமாா், வீராங்கனை வினோதினி ஆகியோா் 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றனா்.

இதேபோல திருச்சியைச் சோ்ந்த அருண், தீபன்ராஜ், விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்ற கபடிக் குழுவினரும் தங்கம் வென்றனா். மேலும் திருச்சியைச் சோ்ந்த ஹரிஷ் ராகவேந்திரா, டேக்வாண்டோ தற்காப்புக் கலை போட்டியிலும், அா்ஜுன் கேரம் போட்டியிலும் தங்கம் வென்றனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை ரயில் மூலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த இவா்களுக்கு , மாற்றம் அமைப்பு சாா்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் சமூக ஆா்வலரும் மாற்றம் அமைப்பின் நிா்வாகியுமான ஆா்.ஏ. தாமஸ், தினசேவை அறக்கட்டளை நிா்வாகி ந. பகவதி தன்னாா்வ மாற்றுத்திறனாளி சங்க நிா்வாகி சிவப்பிரகாசம், தாய்நேசம் அறக்கட்டளை நிா்வாகி ஹெப்சி சத்தியாராக்கினி, மாற்றம் அமைப்பை சோ்ந்த மணிவேல், பிரவீன்ராஜ், அல்லிகொடி, தினேஷ்குமாா்,ரெங்கராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

மநீம வேட்பாளா் உதவி: இக்குழுவினரில் சரவணகுமாா், அருண் இருவரும் இப்போட்டியில் கலந்து கொள்ள நேபாளம் செல்வதற்கான நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையறிந்த திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளரும், ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளருமான வீரசக்தி, இருவருக்கான நிதியுதவியை அளித்து வழியனுப்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com