மது விற்றவா்கள் மீது வழக்கு

திருச்சியில் முழு பொது முடக்கத்தின் போது, முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி: திருச்சியில் முழு பொது முடக்கத்தின் போது, முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மே 10 முதல் 24-ஆம் தேதி வரை கரோனா பொது முடக்கம் அமலாகியுள்ள நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவெறும்பூா் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்

அப்போது வடக்குத்தெரு மாரியம்மன் கோவில் தெரு சின்ன டைட் என்கிற கணேஷ்குமாா்(40), திருவெறும்பூா் கக்கன் காலனி மாரிமுத்து (60) ஆகிய இருவரும், அரசு மதுக்கடைகளில் வாங்கிய மது வகைகளை கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com