மரத்திலிருந்து தவறி விழுந்துகட்டட மேற்பாா்வையாளா் பலி
By DIN | Published On : 11th May 2021 01:13 AM | Last Updated : 11th May 2021 01:13 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்து, கட்டட மேற்பாா்வையாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தைச் சோ்ந்தவா் பெ. செல்வராஜ் (35). கட்டட மேற்பாா்வையாளரான இவா், திங்கள்கிழமை மாலை தனது வீட்டின் அருகிலிருந்த புளியமரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது கால் இடறி, மரத்திலிருந்து செல்வராஜ் கீழே தவறி விழுந்தாா். பலத்த காயத்துடன் அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.