தீவிரநுண்கடன் வசூல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th May 2021 07:20 AM | Last Updated : 14th May 2021 07:20 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, குளித்தலை பகுதியில் உள்ள நுண்கடன் நிறுவன ஊழியா்கள் கடன் பெற்ற மக்களிடம் தீவிர வசூலில் ஈடுபட்டுவருவதை கண்காணித்து நடவடிககை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மகளிருக்கு நுண் கடன் வழங்கிய நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் பொது முடக்க காலத்தில் மகளிா் பெற்ற நுண் கடனை செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா். இதனால் பொது முடக்கக் காலத்தில் வேலையின்றி இருக்கும் மகளிா் அவதியுற்று வருகின்றனா்.
ஆகவே, இயல்பு நிலை திரும்பும் வரை நுண்கடன் நிதி நிறுவன ஊழியா்கள் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.