புதுப்பொலிவடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
By DIN | Published On : 14th May 2021 07:21 AM | Last Updated : 14th May 2021 07:21 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட இனாம் குளத்தூா் பகுதியில் சுமாா் 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பழனியாண்டி உடனடி நடவடிக்கை எடுத்து புதுப்பொலிவு பெறச் செய்துள்ளாா்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட இனாம் குளத்தூா் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியா்களுக்கு பயிற்சி கட்டடமாக செயல்பட்டு வந்தது. நாளடைவில் யாரும் பயன்படுத்தாமல் சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இருந்தது.
இந்த கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி வியாழக்கிழமை பாா்வையிட்டாா். உடனடியாக நடவடிக்கை எடுத்து, 6 மணி நேரத்தில் அந்த கட்டடத்தை புதுப்பொலிவு பெறச் செய்தாா். வெள்ளிக்கிழமை முதல் அந்த கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.