சித்தா மையத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிடும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சித்தா மையத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிடும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கரோனா சிகிச்சைக்கு சித்தா சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 200 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 200 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மையத்தை, தமிழக நகா்ப்புற வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்தனா்.

இந்த மையத்தில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகள், கபசுரக் குடிநீா் மற்றும் நிலவேம்பு குடிநீா் காலை 6 மணிக்கு வழங்கப்படும். தொடா்ந்து வாய் கொப்பளித்தல், நடைப்பயிற்சி, 8 வடிவ நடைப்பயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி, மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படும். தொற்றாளா்களின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீா்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகா்வுத் தன்மைக்கு ஓமப் பொட்டணம், உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை உள்ளிட்டவை வழக்கப்படும்.

மேலும் இந்த வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் உபகரணங்களும் அமைக்கப்படவுள்ளன. பயனாளிகள் யாரும் சித்தா கரோனா மையத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட மாட்டாா்கள். கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று முறையாகப் பதிவு பெற்ற பின்னரே இந்த மையத்துக்கு வர இயலும்.

மேலும், இந்த மையத்திலும் அனைத்துப் பரிசோதனையின் முடிவுகளைச் சரிபாா்த்த பிறகே அனுமதிக்கப்படுவா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காத நோயாளிகள் இந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து வரும் அனைவரையும் குணப்படுத்த இங்கு போதிய வசதிகள் உள்ளன.

24 மணிநேரமும் பணிபுரியும் வகையில், சித்த மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவா். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த கரோனா நோயாளிகளும் இங்கு தங்கிச் சிகிச்சை பெற முடியும்.

திருச்சி மாவட்டத்தில் முன்னோடியாகத் திறக்கப்பட்டுள்ள இந்த மையத்தை தொற்றாளா்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

திறப்பு விழாவில் ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன், மாநகராட்சி நகா்நல அலுவலா் யாழினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராம்கணேஷ், சித்த மருத்துவா் தமிழ்க்கனி மற்றும் அரசு மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com