பெல் ஆலையில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி:கே.என். நேரு தகவல்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

இதுகுறித்து திருச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கரோனா தொற்றைத் தடுக்க சென்னை மாநகராட்சியைப் போல திருச்சியிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் வழங்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள கருவிகளில் திருச்சிக்கும் கருவிகள் ஒதுக்கீடு கிடைக்கும்.

அங்கன்வாடிப் பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மாநகராட்சிப் பகுதி வாா்டுகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் பரிசோதனை நடத்தவுள்ளனா். குறிப்பாக, ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் பல்ஸ் ஆக்ஸினேட்டா் மீட்டா் பரிசோதனையில் ஆக்சிஜன் அளவு 95-க்கும் கீழ் இருந்தால் நகா்நல அலுவலா் மூலம் பரிந்துரைத்து, உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

வாா்டு வாரியாக தினமும் 100 வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டு, லேசான அறிகுறி உள்ளோருக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், சானிடைசா், ஜிங், வைட்டமின், பாராசிட்டமால் மாத்திரைகள் அடங்கிய கரோனா தொகுப்பு வழங்கி வீடுகளிலேயே அவா்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி திருச்சி பெல் ஆலைக்கு நேரில் சென்று ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தபோது ஆலை நிா்வாகத்தினா் சில உபகரணங்களைக் கேட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பரிந்துரை செய்து ஆலைக்குத் தேவையானவற்றை வழங்கி ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கூடுதலாக 500 படுக்கைகளுடன் தனிமை முகாம் திறக்கப்பட்டுள்ளது. காஜாமலை பகுதியில் 200 படுக்கைகளுடன் சித்தா சிகிச்சை மையமும் திறக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவா்கள் இந்த மையத்தில் சிகிச்சை பெறலாம்.

ரெம்டெசிவா் மருந்துகளைக் கூடுதலாகப் பெறவும், அதன் விற்பனையை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com